கோழி பண்ணையில் இருந்து சடலம் மீட்பு!
புப்புரஸ்ஸ பகுதியில் கோழிப்பண்ணையில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு! புப்புரஸ்ஸ, ரஜத்தலாவ பகுதியில் கோழி பண்ணையிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ரஜத்தலாவ, கேடகும்புரே பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 60 வயது நபரொருவரே இவ்வாறு கடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குறித்த கோழி பண்ணையில் வேலை செய்து வந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. கம்பளை , புப்புரஸ்ஸ பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?






