பஞ்சிகாவத்தை துப்பாக்கிச் சூடு - காயமடைந்தவர் தீவிர சிகிச்சை பிரிவில்
மருதானை பொலிஸ் பிரிவுக்குபட்ட பஞ்சிகாவத்தை வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று (06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?






