விபத்துக்குள்ளான பேருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்டது!

எல்ல - வெல்லவாய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்தானது, 2023ஆம் ஆண்டு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பதிவு நீக்கம் செய்யப்பட்ட பேருந்து என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். மேலும் விபத்துக்களைக் குறைப்பதற்கு வீதி மேம்பாட்டு ஆணைக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வு செய்வதற்கு மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஒரு குழுவினர் இன்று அப்பகுதிக்கு சென்றுள்ளது. மேலும் வீதி பாதுகாப்பு குறித்த திட்டத்தில் இணைக்கப்பட்ட போக்குவரத்து மருத்துவ சபை மற்றும் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் குழுவும் இன்று எல்ல பகுதிக்குச் சென்று விபத்துக்குள்ளான பேருந்தை ஆய்வும் செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SaiSai
Sep 6, 2025 - 09:03
 0  12
விபத்துக்குள்ளான பேருந்து பதிவு நீக்கம் செய்யப்பட்டது!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow