விஜய் - சீமான் இடையே 3வது இடத்துக்குத்தான் போட்டி நடக்கும் - தமிழிசை தெரிவிப்பு
தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி. அடுத்த இடத்திற்கு சீமானும் விஜய்யும் போட்டி போட்டுக் கொள்ளலாம்." என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.சென்னையை அடுத்த மூவரசம்பட்டில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில், முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.