டன்சினன் மத்திய பிரிவில் தீ விபத்து பத்து வீடுகள் சேதம்!
டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து! 10 வீடுகள் சேதம்! பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று 25.08.2025 முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் அறைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன், சொத்துகளும் சேதமடைந்துள்ளன. நெடுங்குடியிருப்பில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தோட்ட இளைஞர்கள், மக்களின் ஒத்துழைப்புடன் தீ கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
What's Your Reaction?






