16 வயது சிறுமி மாயம் வலை வீசும் பொலிஸ்

16 வயது பெண் மாயம், இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில்.இன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு தாய் தந்தையர் தோட்ட பணிக்கு சென்ற வேளையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் செய்து உள்ளார் . தந்தை இது குறித்து தெரிவிக்கையில் மகள் 16 வயது உடையவர் சாமிமலை பெயலோன் தோட்ட பாகினி பிரிவில் தனது மாமி வீட்டில் இரவு தங்கி இருந்த வேளையில் நானும் மனைவியும் தோட்ட பணிக்கு சென்ற வேளையில் இச் சம்பவம் இடம் பெற்று உள்ளது. மகள் பெயர்லோன் தமிழ் வித்தியாலயத்தில் தரம் எட்டு வரை கல்வி பயின்றார் அதன் பின்னர் நோய் ஏற்பட்ட காரணத்தால் இடை நடுவில் விலகி எனது மாமியார் உடன் இரவு நேரத்தில் தங்குவது வழக்கம் இன்றும் நாங்கள் இருவரும் பணி முடித்து வந்த போது மகள் இல்லை இன்று காலை சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்று அப் பகுதியில் கண்டதாகவும் அதில் இளைஞர்கள் இருந்ததாகவும் அந்த வேனில் வந்த இளைஞர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கூறினார். இது குறித்து மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார். வேன் இலக்கம் PH.8233 வெள்ளை நிற சிரிய ரக வேண் என அடையாளம் கண்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடையாளம் கண்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார 0522277222 க்கு அறிவிக்கவும். மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்.

SaiSai
Sep 4, 2025 - 00:33
 0  95
16 வயது சிறுமி மாயம் வலை வீசும் பொலிஸ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow