கொழும்பில் அனுர கோ ஹோம் கோசம்
கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அருகிலுள்ள கியூ வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அனுர கோ ஹோம்’ என கோக்ஷங்களை எழுப்பி வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க Zoom காணொளி அழைப்பு மூலம் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட்டத்தினரிடையே உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டுப் போராட்டம் இப்போது தொடங்கிவிட்டது என்று கூறினார்.

What's Your Reaction?






