மஸ்கெலியாவில் 04 மாதமாக எரிவாயு தட்டுப்பாடு !
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் லாஃப் எரிவாயு தட்டுபாடு பார்வையாளர்கள் அவதி. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள லாஃப் எரிவாயு விற்பனை நிலையங்களில் லாஃப் எரிவாயு விற்பனைக்கு இல்லை. இதன் காரணமாக லாஃப் எரிவாயு பார்வையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர். பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கையில் வெற்று சிலிண்டர்களை எடுத்து கொண்டு செல்ல பெரும் சிறமபடவேண்டி உள்ளது எனவும் அவ்வாறு சிரமத்திற்கு மத்தியில் லாஃப் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கு எடுத்து வந்த போதிலும் எரிவாயு இல்லாமல் பல முறை வெற்று சிலிண்டர்களை எடுத்து கொண்டு செல்ல நேரிட்டது எனவும் இதனால் பல சிரமங்களை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என பார்வையாளர்கள் தெரிவித்தனர். லாஃப் எரிவாயு விற்பனை செய்யும் முகவர் கருத்து தெரிவிக்கையில் கடந்த சில மாதங்களாக எமது விற்பனை நிலையத்தில் லாஃப் எரிவாயு பாவனையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாது உள்ளது காரணம் எமது லாஃப் எரிவாயு நிறுவனம் எமக்கு எரிவாயு வழங்க வில்லை. நாளாந்தம் பல பாவனையாளர்கள் எரிவாயு கேட்டு வருவதை காணக் கூடியதாக உள்ளது. இதனால் பாரிய அளவில் பாவனையாளர்கள் எரிவாயு இல்லாமல் சிரமங்களை எதிர் நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறினார். மஸ்கெலியா நிருபர்
What's Your Reaction?






