டிரஸ்ட் வழங்கிய அம்பியூலன்ஸ் வண்டிகளின் நிலை!
டிரஸ்ட் நிறுவனம் மூலம் பெருந் தோட்ட பகுதிக்கு வழங்கிய அம்பூலன்ஸ் வண்டிகள். பெருந்தோட்ட தொழிலாளர்கள் நலன் கருதி கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான அம்பூலன்ஸ் வண்டிகள் நகரை அண்டிய பகுதிகளில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் இடத்தில் பல ஆண்டுகளாக உக்கும் நிலையில் உள்ளது. ஆர்.பி.கே பிளான்டேசன்,ஹொரன பிளான்டேசன்,அக்கரபத்தனை பிளான்டேசன், தலவாக்கலை பிளான்டேசன்,லங்கெம் பிளான்டேசன், பொகவந்தலாவ பிளான்டேசன், என பல்வேறு பட்ட நிறுவனங்கள் பெருந்தோட்ட கம்பனிகளாக உள்ளது. கடந்த காலங்களில் இந்த கம்பெனிகள் பல பெருந்தோட்ட தொழிலாளர்கள் நலன் கருதி அவசர தேவைக்கு பயன் படுத்த பெருந் தொகை பணத்தை கொடுத்து வாங்கிய அம்பூலன்ஸ் வண்டிகள் நாளடைவில் ஒரு சில தோட்டங்களில் பழுது அடைந்து விட்டது. அவற்றை சீர் செய்ய வாகன திருத்தும் இடமான மஸ்கெலியா சாமி மலை வீதியில் அமைந்துள்ளது வாகன திருத்தும் இடம் மற்றும் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியில் அமைந்துள்ளது வாகன திருத்தும் இடம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. சாதாரணமாக ஓரு அம்பூலன்ஸ் வண்டி தற்போது உள்ள விலையில் 5 கோடியை தாண்டி உள்ளது. இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் பெருந்தோட்ட மக்களின் நலன் கருதி அவசர தேவைக்கு பயன் படுத்த கொண்டு வர பட்ட அம்பூலன்ஸ் வண்டிகள் பற்றி பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் பெருந்தோட்ட கம்பெனிகள் பெருந்தோட்ட மனித வள நிறுவனம் முன் வந்து அவ்வாறு உள்ள வாகனங்களை சீர் செய்து மீண்டும் பெருந் தோட்ட மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும். இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் பெருந் தோட்ட கை தொழில் அமைச்சு நாட்டின் தலைவர் பெற்று கொடுக்க முன் வர வேண்டும். செ.தி.பெருமாள் மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?






