பாடசாலை கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு
பாடசாலை கட்டிடம் கையளிக்கும் நிகழ்வு. மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்து ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்டு இயங்கும் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் அமைப்பின் நிதி பங்களிப்பில் ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கோட்டம் மூன்றில் உள்ள மஸ்கெலியா மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலயத்தில் 25 லட்சம் ரூபாய் நிதிச் செலவில் புணரமைக்கப்பட்ட பாடசாலை கட்டிடமானது. இன்று கையளிக்கும் நிகழ்வு இடம் பெற்றது. மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்துடன் இணைந்து இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர் அமைப்பு மலையகத்தில் பல்வேறான கல்விப்பணிகளை கடந்த 20 வருடங்களாக முன்னெடுத்து வருகின்றது. மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலய சமூகத்தின் தேவை உணர்ந்து மேற்படி வேலைத்திட்டம் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் சிவஞானம் போஷகர்கள் உறுப்பினர்கள் , ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கல்வி அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?






