மருத்துவமனை கட்ட யாரிடமும் ஒரு சதம் கூட வாங்காத பாலா.
சென்னை: கேபிஒய் பாலா ஹீரோவாக அறிமுகமாக உள்ள காந்தி கண்ணாடி படத்தில், நமிதா கிருஷ்ணமூர்ததி நாயகியாக நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பாலா, ஏழை மக்களுக்கு பயன்தரும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்டி வருவதாக கூறியுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா. அதன் பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பலரை வாய்விட்டு சிரிக்க வைத்தார். ஆரம்பத்தில் சின்ன சின்ன காமெடியில் வந்து கலக்கிய பாலாவிற்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி திருப்பு முனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சிக்கு பின் விஜய் சேதுபதியின் புலிக்குட்டி பாண்டி, விமர்சகரான ப்ளூ சட்டை மாறனின் ஆண்டி இந்தியன், நாய் சேகர், போன்ற படங்களில் நடித்து வந்தார். இதுவரை மருத்துவமனையை கட்டுவதற்காக யாரிடமிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. பலரும் உதவி செய்வதாக சொல்கிறார்கள். ஆனால், நான் அவர்களிடம் வாங்கி உதவி செய்வதற்கு நான் எதற்கு என்னுடைய முயற்சியால் இந்த மருத்துவமனை வர வேண்டும் என்று தான், நான் நினைக்கிறேன். தற்போது 80 சதவீத கட்டிட பணிகள் முறிந்து விட்டது. இலவச மருத்துவமனை என்பதால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் அது கிடைத்துவிட்டால் இந்த மருத்துவமனையை செயல்படுத்தி விடுவேன் என்று பாலா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

What's Your Reaction?






