மலையகத்தில் பிரமாண்ட ஆண்மீக எழுச்சி ஊர்வலம் இன்று.

விஷ்வ ஹிந்து பரிஷத் - இலங்கை மாபெரும் விநாயகர் சதுர்த்தி ஆன்மீக எழுச்சி இரண்டாவது வருட ஊர்வலம்-2025 எழில் கொஞ்சும் மலையக மண்ணில், அருள்மிகு விநாயகப் பெருமானுக்கு ஆவணி மாத சதுர்த்தி பெருவிழா, இதுவரை கண்டிராத பிரமாண்டமான முறையில் ஹரிங்ட்டன் விஷவ ஹிந்து பரிஷத் நிலையம் கொட்டகலையில் கொண்டாடப்படுகிறது. 2025.08.31ம் திகதி இன்று கொட்டகலை கொமர்சல் தடாகத்தில் விநாயகர் சிலைகளை விஜர்ஜனம் அதாவது கரைத்தல் செய்தவற்காக 15 தோட்ட ஆலயங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட உள்ளன பெரிய மண்வெட்டி தோட்டம் சின்ன மண்வெட்டி தோட்டம் ரொசிட்டா தோட்டம் ஸ்டோனி கிளிப் தோட்டம் ஹரிங்டன் தோட்டம் லொக்கில் பளிங்கு மலை தோட்டம் கல்கந்தை தோட்டம் கொமர்சல் (தர்மபுரம்) செல்வகந்த தோட்டம் மூங்கில் கொட்ட கலை(A) டிவிசன் மூங்கில் கொட்டகலை எதன் சைட் தோட்டம் விக்டன் தோட்டம் கொட்டகலை நகர் விநாயகர் கோயில் ஆகிய தோட்டங்களில் இருந்து விநாயகர் சிலைகள் கொண்டு வரப்படும் பெரிய மண்வெட்டி தோட்ட ஆலய முன்றலில் இருந்தும் ,கொட்டகலை பிரதேச சபைக்கு அருகில் இருந்தும் 31ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று, கொட்டகலை கொமர்சல் வாவியில் பிற்பகல் 6 மணிக்கு விசர்ஜனம் அதாவது (கரைத்தல்) செய்யப்படும். மேலும் இந் நிகழ்வின் போது உங்கள் வீட்டில் களிமண், மஞ்சள், பசுஞ்சாணம் ஆகியவற்றால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, கொண்டு சென்று, கொட்டகலை வாவியில் மாலை 5 மணி முதல் 6 மணி பூஜைகள் நடைபெற்ற பின்னர் விசர்ஜனம் அதாவது (கரைத்தல்) செய்யலாம் என்றும் கொட்டகலை ஹரிங்ட்டன் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அறிவித்துள்ளார். மஸ்கெலியா நிருபர். செ.தி.பெருமாள்.

SaiSai
Aug 31, 2025 - 08:08
 0  31
மலையகத்தில் பிரமாண்ட ஆண்மீக எழுச்சி ஊர்வலம் இன்று.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow