விராட் கோலி ஆக்ரோஷமான மனிதர் இல்லை முன்னாள் வீரர் ஸ்ரீ சாந்த்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், விராட் கோலியின் ஆக்ரோஷமான ஆட்ட விதத்தைப் பற்றியும், தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும் தனது கருத்துகளைப் பகிர்ந்தார். கிரிக்கெட் வீரராக இருந்து வர்ணனையாளராக மாறிய அவர், கோலி தனது தீவிர ஆளுமையைக் களத்தில் குறைத்தால், அவர் அதே வீரராக இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
2011 உலகக் கோப்பை வெற்றி அணியில் கோலியுடன் இணைந்து விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கோலியின் ஆக்ரோஷமான நடத்தை தான் அவரது வெற்றிக்கு முக்கிய காரணம் என்று வலியுறுத்தினார். கோலியின் கள நடத்தை குறித்து பேசிய அவர்,ஆக்ரோஷத்திற்கும் ஆர்வத்திற்கும் இடையே தெளிவான வேறுபாட்டை எடுத்துரைத்தார்