கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில் பயணிகளின் வசதியை உறுதிப்படுத்தவும், நெரிசலை திறம்பட நிர்வகிக்கவும் புதிய நடவடிக்கையை அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 10:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை, புறப்பாட்டு மண்டபத்திற்கு வருகையாளர்களுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்படாது என அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை பயணிகள் மற்றும் விமான நிலைய பணியாளர்களின் வசதியை உறுதிப்படுத்துவதற்காக அமல்படுத்தப்படுகிறது என விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது.

SaiSai
Aug 18, 2025 - 23:29
 0  26
கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow