புதிய முயற்சியாமை தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில்.

"புதிய முயற்சியாண்மை ஆரம்பிப்புகள் தொடர்பான செயலமர்வு இந்தியாவின் தெலுங்கானாவில் தொடங்கியது!" இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் அனுசரணையின் கீழ் தெலுங்கானா மாநிலம் கலாநிதி மாரி சன்னா ரெட்டி மனிதவள அபிவிருத்தி நிலையத்தின் புதிய முயற்சியாண்மை ஆரம்பிப்புகள் தொடர்பான செயலமர்வு நேற்று (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ரஷ்யா வியட்நாம் லிபனான் ஜோர்டான் ஜமைக்கா நேபால் பனாமா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்கும் இச்செயலமர்வில் இலங்கை சார்பாக பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் ரூபதர்ஷன் சங்கரலிங்கம் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தொடர்பாடல் அதிகாரி ஜானக குமணநாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் இச்செயலமர்வு பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் மற்றும் களவிஜயங்களோடு தொடர்ந்து இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்

SaiSai
Aug 20, 2025 - 17:53
Aug 20, 2025 - 18:05
 0  13
புதிய முயற்சியாமை தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில்.
புதிய முயற்சியாமை தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில்.
புதிய முயற்சியாமை தொடர்பான கருத்தரங்கு இந்தியாவில்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow