மலையகத்தில் புதிய கூட்டணி உதயம்! பிளவுபட்டது தொழிலாளர் தேசிய சங்கம்?
தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இனைந்து உருவாக்கிய புதிய கூட்டணி அறிமுக ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் ஹட்டன் லா எடம்ஸ் விருந்தகத்தில் கூட்டணியின் தலைவர் பா.சிவனேசன் தலைமையில் இடம்பற்றது.
இவ் ஊடக சந்திப்பில் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராம் ஹட்டன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் இளைஞர் அணி தலைவர்பா.சிவநேசன் ஹட்டன் டிக்கோய நகர சபை உறுப்பினர் அழகமுத்து நந்தகுமார், அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த கால படிப்பினைகளை கொண்டு புதிய சிந்தனையுடனான கூட்டணியாக இது பரிணமிக்கும் என கூட்டணியின் தலைவர் பா.சிவநேசன் தெரிவித்தார்.
What's Your Reaction?



