மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு அமைதி போராட்டம்.

SaiSai
Oct 25, 2025 - 13:46
Oct 25, 2025 - 19:01
 0  28
மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு அமைதி போராட்டம்.

 

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் விழிப்புணர்வு அமைதி போராட்டம்.

இன்று 25/10/2025 ம் திகதி காலை 10 மணிக்கு மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் பணி புரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து 30 நிமிடங்கள் இந்த அமைதி போராட்டம் நடத்தினர்.

இதற்க்கான காரணம் இவ் வைத்திய சாலைக்கு வரும் நோயாளர்களினால் வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் இடையில் ஏற்படும் சச்சரவுகள் மற்றும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போதும், முதலுதவி சிகிச்சை அளிக்கும் போதும், ஏற்பட்டு வரும் சிக்கல் நிலையில் நோயாளிகள் கொலை மிரட்டல் மற்றும் தாக்குதல் போன்றவை தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.
இவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த அறவழி போராட்டம் நடத்தினர்.

திடீர் சுகவீனம் ஏற்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் போது அவர் சிகிச்சை முடிந்த பிரகு சிகிச்சை அளித்த உத்தியோகத்தரை தாக்கியதுடன் கொலை மிரட்டல் செய்தமைக்காகவும் இதற்கு முன் பல இவ்வாறான நிகழ்வுகள் இடம் பெற்றமையை எதிர்த்தும் இந்த அறவழி போராட்டம் ஒரு முன்னுதாரணமாக அமையக்கூடும் என போராட்டக்காரர்கள் கூறினார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow