பதினாறு வயது சிறுமியை கொலை செய்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்ட காதலன்!
கம்பளை – மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் நேற்று (14) இரவு சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும். 27 வயதுடைய காதலன் தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கம்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்ட சிறுமி மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவரவார் என பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரான சிறுமியின் காதலனை தேடிய போலீசாருக்கு அவருடைய சடலத்தையே மீட்க கிடைத்துள்ளது.
மேற்படி சந்தேக நபர் சிறுமியை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் திருகோணமலையில் தொழில் புரிந்து வந்தாகவும் சிறுமிக்கும் இவருக்கும் இடையில் ஏற்பட்ட காதல் விவகாரம் காரணமாக இந்தக் விபரீதம் நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கும் அதே வேளையில், மேலதிக விசாரணைகளும் இடம் பெற்று வருகின்றன.
What's Your Reaction?



