சாரதி அனுமதி பத்திரத்துக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
அச்சிடும் அட்டைகள் இல்லாத காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரத்தில் இருந்து அந்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு நாளைக்கு சுமார் 6,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடத் தேவையான அட்டைகள் இல்லாததால், கடந்த காலத்தில் சுமார் 350,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படாமல் தேங்கிக் கிடப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
What's Your Reaction?



