இரவு நேர அஞ்சல் இரயில்கள் இரத்து!
மஸ்கெலியா நிருபர்
தற்காலிகமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (26) முதல் மலையக பிரதான ரயில் பாதையில் நானுஓயா மற்றும் பதுளைக்கு இடையில் இரவு நேர அஞ்சல் ரயில்களை இயக்குவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, பிரதான பாதையில் இரவு நேர அஞ்சல் ரயில்கள் கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவிற்கும், நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல், கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயாவிற்கும் பயணிக்கும் ரயில்களை நேற்று இரவு 8.30 மணிக்கும், நானுஓயாவிலிருந்து கொழும்பு கோட்டைக்கு பயணிக்கும் ரயில்களை இரவு 10.50 மணிக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
நானுஓயாவிற்கும் பதுளைக்கும் இடையில் இரவு நேர அஞ்சல் ரயில்கள் இயக்கப்படாத நாட்களில், நானுஓயாவிலிருந்து பதுளை பகுதிக்கு இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள், முன்பதிவு வசதிகள் கொண்ட எந்த ரயில் நிலையத்திலிருந்தும் தங்கள் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கை டிக்கெட்டுகளுக்கான பணத்தைப் பெறலாம் என்றும், இதனால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு வருந்துவதாகவும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?



