குருநாகல்-தலாவ விபத்து 03 பேர் பலி!
குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று (25) லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு, நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?



