நீதிமன்ற திகதியை மாற்றி தருவதாக லஞ்சம் கோரிய நீதிமன்ற உத்தியோகத்தர் கைது!
உடுகம மாஜிஸ்திரேட் நீதிமன்ற பணியாளர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது
காலி – உடுகம மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பணியாற்றும் சமன்கள் மற்றும் மதிப்பீட்டு பிரிவு அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் லஞ்ச ஊழல் தடுப்பு கமிஷன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி காலி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய போது, காலி கூடுதல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட ஒரு வழக்கில், சமனில் குறிப்பிடப்பட்டிருந்த நீதிமன்ற திகதியை மாற்றி தருவதாக வாக்குறுதி அளித்து, அது தொடர்பான சமனை சட்டவிரோதமாக ஒரு தரப்பினரிடம் ஒப்படைத்திருப்பது தெரியவந்துள்ளது.
இச் செயலுக்கு மாற்றாக, குறித்த பெண்ணிடமிருந்து ரூ.3,500 லஞ்சம் கோரியதாகவும், லஞ்சத் தொகையை பெற்றுக்கொண்ட தருணத்தில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர் செய்ததையடுத்து, வரும் 28 ஆம் திகதி வரை ரிமாண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்ப
டுகிறது.
What's Your Reaction?



