அர்ச்சுனா எம்பியை தகாத வார்த்தைகளால் திட்டி வாங்கி கட்டிய mp

SaiSai
Sep 25, 2025 - 11:12
 0  32
அர்ச்சுனா எம்பியை தகாத வார்த்தைகளால் திட்டி வாங்கி கட்டிய mp

பிரதியமைச்சர் சுனில் வட்டகல கோபம் காரணமாக அர்ச்சுனா எம்.பியை தகாத வார்த்தைகளால் நாடாளுமன்றத்தில் இன்று (24) திட்டியுள்ளார்.

பிரதியமைச்சர் சுனில் வட்டகல உரையாற்றிக் கொண்டிருந்த போது, நிலையியற் கட்டளையில் அர்ச்சுனா எம்.பி எழும்பி கேள்வி கேட்க முற்பட்டார்.

இதன்போது கோபமடைந்த பிரதியமைச்சர் சுனில் வட்டகல,“கதிரையில் உட்காரவும்,எல்லாவற்றுக்கும் மூக்கை நுழைப்பது,எங்கிருந்து இவரை நியமித்தீர்கள்?ஒரு உறுப்பினருக்கு பதிலளிக்கும் போது இந்த பேயன் எப்பவும் எழும்புகிறான், என்று தகாத வார்த்தைகளால் திட்டினார்.

அச்சந்தர்ப்பத்தில் சபைக்கு தலைமையாக்கியவர் குறித்த வார்த்தையை வாபஸ் வாங்கிகொள்ளுமாறு தெரிவித்தார். இதனை தொடர்ந்து பிரதியமைச்சர் வட்டகல, குறித்த வார்த்தையை வாபஸ் வாங்குவதாக தெரிவித்தார்.

www.jaffnamuslim.com

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow