என்ன இருந்தாலும் ஆப்பிளால அத மட்டும் பண்ண முடியாதே!! கிண்டலடித்த சாம்சங்-

SaiSai
Sep 25, 2025 - 08:45
 0  23
என்ன இருந்தாலும் ஆப்பிளால அத மட்டும் பண்ண முடியாதே!! கிண்டலடித்த சாம்சங்-

ஆப்பிள் VS சாம்சுங்: Technical போட்டி 

"என்ன இருந்தாலும் ஆப்பிளால அத மட்டும் பண்ண முடியாதே!! கிண்டலடித்த சாம்சங்-

ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 17 சிரிஸ் நேற்று வெளியான நிலையில் அதை கிண்டல் செய்யும் விதமாக சாம்சங் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது.

தொழில்நுட்ப உலகில் ஆப்பிள் ஐஃபோன்களுக்கும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையேயான மோதல் என்பது காலம் காலமாக இருந்து வருகிறது. உலகம் முழுவதும் அதிகமான அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன்களே பயன்படுத்தப்பட்டாலும், விலை உயர்ந்த ஐஃபோனையும், அதில் விலை கொடுத்து வாங்கும் அப்ளிகேஷன்களையும் பயன்படுத்துவது புதிய கால கௌரவமாக மாறியுள்ளது.

ஆனால் ஐஃபோன்களை மிஞ்சிய வசதிகளுடன் பல ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. அப்படி பல ஸ்மார்ட்போன்களை வெளியிடுவதில் உலக அளவில் சாம்சங் நிறுவனம் முக்கிய இடத்தில் உள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் சாம்சங் முதல்முறையாக டச் ஃபோனிலேயே மடிக்கக் கூடிய ஃபோல்ட் வகை ஃபோன்களை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர் ஆப்பிள் நிறுவனமும் அவ்வாறாக மடிக்கக் கூடிய வகையிலான ஐஃபோன்களை தயாரிக்க முயன்றதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் 2022ம் ஆண்டில் ஆப்பிள் ஐஃபோன் 16 அறிமுகமானபோது, அதை மடிக்க முடியுமா என கேட்டு கிண்டலாக சாம்சங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது. தற்போது ஐஃபோன் 17 மாடல் வெளியாகியுள்ள நிலையில் அவையும் மடிக்கக்கூடியவையாக தயாரிக்கப்படவில்லை என்பதை குத்திக்காட்டும் விதமாக பழைய போஸ்ட்டை ரீட்வீட் செய்த சாம்சங் “இது இன்னும் தொடர்புடையதாக இருப்பதை என்னால் நம்பமுடியவில்லை” என்று பதிவிட்டுள்ளது. ஆப்பிளால் மடிக்கக் கூடிய ஃபோன்களை தயாரிக்கவே முடியாது என வம்பு இழுக்கும் வகையில் பதிவிட்டுள்ளது சாம்சங்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow