"அறியாமை எனும் இருள் நீங்கி அறிவுச்சுடரொளி எங்கும் பரவட்டும்"
"அறியாமை எனும் இருள் நீங்கி
அறிவுச்சுடரொளி எங்கும் பரவட்டும்"
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தீபத்திருநாள் வாழ்த்து செய்தி .
-------------------------------
எளிய மக்களை அடிமைப் படுத்தி, அவர்கள் வாழ்வில் துயரை மட்டும் கொடுத்த நரகாசுரன் எனும் கொடிய அரக்கனால் உலகம் இருள் சூழ்ந்திருந்தது போது , அவனை வீழ்த்தி, அவனால் சூழ்ந்திருந்த துன்பம் எனும் இருளை நீக்கி , விடிவு எனும் ஒளியேற்றிய உன்னத திருநாள் தான் தீபத்திருநாள் என புராண இதிகாசங்கள் கூறுகின்றன. இத்தகைய தீபாவளி திருநாளை உலகமெங்கும் வாழும் இந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இவ்வேளை அவர்களை வாழ்த்துவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
கடந்த காலங்களில் மக்களை அடிமைகளாக வழிநடாத்திய ஓர் காலகட்டத்திலேயே ஆட்சி பொறுப்பை ஏற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்,இக் குறுகிய காலத்தில் வளமான நாட்டில், அழகான வாழ்க்கை வாழ நாட்டு மக்களுக்கு பல சிறந்த வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக சிறுபான்மை மக்களின் உணர்வுகளை மதித்து நாட்டின் இன, மத நல்லிணக்கத்தை இதய சுத்தியோடு ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் ஐக்கியம் உறுதிப்படுத்தப்பட்டு சிறுபான்மை மக்கள் அச்சமின்றி பாதுகாப்பாகவும், சமாதானத்தோடும் இத்தீபாவளி பண்டிகையினை மகிழ்ச்சியோடு கொண்டாட சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
பிரித்து வலுவிலக்கச் செய்யப்பட்ட எம் தாய் திருநாட்டை பிளவுபடாமல் வலுவான வளமான நாட்டை நோக்கி கொண்டு செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது. பன்னெடும் காலமாக இந்து மக்களால் நமது வழிபாட்டு யாத்திரையை அங்கீகரிக்கும் படி கேட்ட கோரிக்கையினை எமது அரசு இக்குறுகிய காலத்தில் இந்து மக்களின் வழிபாட்டு உணர்வை மதித்து அதற்கான அரச அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இதனை நன்றியோடு இத் தீபத்திருநாளில் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம். எதிர்காலத்தில் சகல மதத்தினரதும் உணர்வுகளை மதித்து பயனுள்ள பல தீர்மானங்களை நிச்சயமாக இவ்வரசு எடுக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.
What's Your Reaction?



