முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

SaiSai
Oct 17, 2025 - 19:16
 0  14
முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

முதலாளிமார் சம்மேளனத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்!

இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற நிலையில், இதில் தொழிற்சங்க ரீதியாக அனைவரும் கலந்துக்கொண்ட போதும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துக்கொள்ளாதது பெரும் வேதனை அளிப்பதோடு, அது கண்டிக்கத்தக்க விடயம் எனவும் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கம்பனியின் வளர்ச்சிக்காக தோட்டங்களில் முழுமையாக பாடுப்படும் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொடர்ந்தும் தான்தோன்றி தனமாக செயற்படும் கம்பனிகளை கடுமையாக கண்டிப்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் முதலாளிமார் சம்மேளனம் தொடர்ந்தும் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருகிறது . கம்பனிக்கு எதிராக போராட்டம் நடத்தி தான் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றால் அதற்கும் இ.தொ.கா தயார் எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தொழில் அமைச்சின் முயற்ச்சி வரவேற்கத்தக்கது எனவும். அம்முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow