இலங்கை அழகியின் கிரீடத்தை மீள கொடுத்த தாய்லாந்து!
'மிஸ் யுனிவர்ஸ் ஸ்ரீலங்கா2025' அழகிப் பட்டத்தை வென்ற லிஹாஷா லிண்ட்சே-வைட் (Lihasha Lindsay-White), கடந்த 19 ஆம் திகதியன்று பேங்கொக்கில் ஒரு வாடகை சிற்றூந்தில் (டெக்ஸி) தவறுதலாக விட்டுச் சென்ற தமது கிரீடம் மற்றும் ஆடையை மீளப்பெற்றுள்ளார்.
தாம் குறித்த கிரீடத்தை தவறவிட்ட சம்பவம் குறித்து லிஹாஷா உடனடியாகத் தாய்லாந்தின் 1155 சுற்றுலாச் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு அறிவித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட சுற்றுலாப் காவல்துறையினர், சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து டெக்ஸியின் சாரதியை அடுத்த நாள் ( 20) தொடர்புகொண்டனர்.
பின்னர், கிரீடமும் ஆடையுமும் பத்திரமாக லிஹாஷாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவித்த லிஹாஷா, "தாய்லாந்து ஒரு பாதுகாப்பான நாடு, இங்குள்ள காவல்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்காக உண்மையிலேயே அக்கறை கொள்கின்றனர்," என்று பாராட்டுத் தெரிவித்தார்.
கொழும்பு சர்வதேசப் பாடசாலையின் பழைய மாணவியான 27 வயது லிஹாஷா, தற்போது தாய்லாந்தில் நடைபெறும் 'மிஸ் யூனிவர்ஸ் 2025' அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
What's Your Reaction?



