ஹொங்காங் விமான நிலையத்தில் துருக்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்தது – இருவர் பலி

SaiSai
Oct 20, 2025 - 09:48
 0  19
ஹொங்காங் விமான நிலையத்தில் துருக்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்தது – இருவர் பலி

ஹொங்காங் விமான நிலையத்தில் துருக்கிய சரக்கு விமானம் கடலில் விழுந்தது – இருவர் பலி

ஹொங்காங், அக். 20 : துருக்கிய ஏர் கேரியரான ACT Airlines-க்கு சொந்தமான சரக்கு விமானம் ஹொங்காங் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை விபத்துக்குள்ளானது. விமானம் ரன்‌வேவிலிருந்து வழுந்து கடலில் விழுந்ததில், பாதுகாப்பு பணியில் இருந்த இரு விமான நிலைய ஊழியர்கள் உயிரிழந்தனர்.

விபத்து இன்று அதிகாலை சுமார் 3.50 மணியளவில் ஏற்பட்டது. துபாயில் இருந்து ஹொங்காங் நோக்கி புறப்பட்டிருந்த Boeing 747-400 வகை சரக்கு விமானம், இறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து, ரன்‌வேவிற்கு அருகில் இருந்த பாதுகாப்பு வாகனத்தை மோதி கடலுக்குள் விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்த நான்கு பணியாளர்கள் (crew members) அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் வாகனத்தில் இருந்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஹொங்காங் விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்து ஏற்பட்ட ரன்‌வே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும், விமான போக்குவரத்து மாற்று தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விமானம் Emirates SkyCargo நிறுவனம் மூலம் லீஸ் செய்யப்பட்டதாகவும், அதன் தொழில்நுட்ப பரிசோதனை பதிவுகள் தற்போது பரிசீலனையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளனர்.

வானிலை காரணமா, ரன்‌வே ஈரப்பதமா அல்லது இயந்திரக் கோளாறா என்பதை உறுதிப்படுத்த விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் கணக்கீடுகளின் படி, விபத்து நேரத்தில் விமானம் எந்தவித அவசர சிக்னலையும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த Boeing 747 விமானம் சுமார் 30 ஆண்டுகள் பழமையானது என்றும், முன்னதாக பல சரக்கு சேவைகளில் பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow