வாழும் கலைப் பயிற்சி அமைப்பின் குருவியை சந்தித்தார் ஜீவன்

SaiSai
Sep 17, 2025 - 17:04
 0  19
வாழும் கலைப் பயிற்சி அமைப்பின் குருவியை சந்தித்தார் ஜீவன்

17.09.2025

"

இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை இன்று(17) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

இந்தியாவின் பெங்களுரில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி அவர்கள் முன்னெடுத்த இளைஞர் முன்னேற்றத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, அதனூடாக இலங்கையில் இளைஞர் சக்தி வளர்ச்சித் திட்டங்களைப் பற்றி விரிவாக கலந்துரையாடியாத ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முயற்சிகளுக்கு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி அவர்கள் அளித்துள்ள ஆதரவுக்கு நான் நன்றியுணர்வு கொள்வதாகவும், குருஜியை சந்தித்தது பெருமைக்கொள்வதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா நிருபர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow