இலங்கை மகளிரை வெண்மையாக்கிய க்ரீம் இப்போது சி ஐ டி யில்!
பெரும் கோடிஸ்வரி:
இலங்கை மகளிரை "வெள்ளை" ஆக்கும் பியூ மி கிரீம் CID யில்!!
நடிகை பியுமி ஹன்சமாலிக்கு சொந்தமான சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் விற்பனை நிறுவனம் குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் கிரீம் வகையின் தரம் மற்றும் ஆரோக்கிய நிலை தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசாங்க இரசாயன பகுப்பாய்வு நிறுவனத்திற்கு குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கிரீம் வகைகள் தர நிர்ணயங்களுக்கு உட்பட்டதா என்பதை நிர்ணயம் செய்வதற்கு அனுமதி அளிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் கிரீமின் தரம் குறித்தும் அது அதன் பாதுகாப்பு தன்மை குறித்தும் சோதனை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
What's Your Reaction?



