சரணடைந்தார் சம்பத் மானம்பேரி
கடைசியில் சரணடைந்தார் ICE மனம்பேரி!!
இனி அவரின் நண்பர்களுக்கு சூடாக இருக்கும்!!
கைது செய்ய தேடப்பட்டு வந்த சம்பத் மணம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றில் சரணடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மித்தெனிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ என்ற போதைப்பொருளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயனங்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் மனம்பேரி தேடப்பட்டு வருகின்றார்.
கடந்த 15ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது மணம்பேரி நீதிமன்றில் சரணடைய விருப்பம் தெரிவித்ததாக அவரது சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த வழக்கு விசாரணையில் உள்ளது, மேலும் சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
What's Your Reaction?



