மஸ்கெலியாவில் இரண்டு கஞ்சா செடிகளுடன் தோட்டத் தொழிலாளர் ஒருவர் கைது
மஸ்கெலியா புரவுன்சீக் தேயிலைத் தோட்டத்தின் எமலீனா பிரிவில் உள்ள காய்கறித் தோட்டமொன்றில் சட்டவிரோதமாக இரண்டு கஞ்சா செடிகளை பயிரிட்டதாகக் கூறப்படும் சந்தேகத்தின் பேரில், மஸ்கெலியா காவல்துறை அதிகாரிகள் இன்று (01) ஒரு தோட்டத் தொழிலாளியை கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா காவல் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ். புஷ்பகுமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே இச்சம்பவம் வெளிச்சமிட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு கஞ்சா செடிகளும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது, நீதிமன்றம் சந்தேகநபரை ரூபா 5 லட்சம் சரீர பிணையில் விடுவித்து, வரும் நவம்பர் 12, 2025 அன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது என மஸ்கெலியா காவல்துறை தெரிவித்துள்ளது.
What's Your Reaction?



