குளவிக் கொட்டுக்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில்!
குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்திய சாலையில்.
இச் சம்பவம் இன்று மதியம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள டீசைட் தோட்டத்தில் இடம் பெற்று உள்ளது.
தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பறித்து கொண்டு இருந்த பெண் ஒருவர் ஆண்கள் இருவரை குளவி கொட்டியதால் குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று பேரையும் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு இரண்டு ஆண்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



