பளுதூக்கி பழுது, கர்ப்பிணி பெண்கள் அசெளகரியம்!

கடந்த மார்ச் மாதம் முதல் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பாரதூக்கி பழுதாகி உள்ளது இதன் காரணமாக கர்ப்பிணி பெண்கள் அவதி. 5 மாத காலமாக மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் உள்ள பாரதூக்கி இயங்கவில்லை. இது குறித்து வைத்திய சாலையில் உள்ள அதிகாரியிடம் கேட்ட போது பிரதான மின் மாணி பகுதியில் இருந்து மின் இணைப்பு வழங்கபட்டு உள்ள மின் இணைப்புக்கு பொருத்தப்பட்டுள்ள கேபல் வயர் குழாய் பகுதியில் தீ மாற்றியதால் பாரதூக்கிக்காண மின் இணைப்பு துண்டிக்க பட்டு உள்ளது. அதனை சீர் செய்ய சம்பந்தப்பட்ட மின்சார சபைக்கும் சம்பந்தப்பட்ட திணைக்களம் நுவரெலியா மாவட்ட சுகாதார ஆணையாளர் அனைவருக்கும் அறிய வந்துள்ளதாகவும் அந்த கேபல் வயர் மாற்றம் செய்ய பாரிய அளவில் நிதி தேவை என்பதால் காலம் தாமதம் ஆகுவதாக தெரிய வந்துள்ளது. மலையக கிராம பகுதிகளில் உள்ள மக்கள் நாளாந்தம் கூலி வேலை செய்பவர்கள்.திடீர் என பிரசவம் ஏற்படும் பட்சத்தில் வாகனத்தில் ஏற்றி கொண்டு வைத்திய சாலைக்கு கொண்டு வந்தால் முதல் மாடிக்கு கொண்டு செல்ல முன் இடைநடுவில் பிரசவம் ஏற்படும் பட்சத்தில் தாய் சேய் மரணிக்க நேரிடும் ஆகையால் சம்பந்தப்பட்ட அமைச்சு மற்றும் மத்திய மாகாண சுகாதார அதிகாரிகள் நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரிகள் மின்சார சபை உடன் கவணம் செலுத்தி பாரதூக்கிக்கு வரும் மின் இணைப்பை பூமிக்கு அடியில் இல்லாமல் கம்பத்தில் இருந்து பெற்று தர முன் வரவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

SaiSai
Aug 24, 2025 - 16:23
Aug 25, 2025 - 10:53
 0  15
பளுதூக்கி பழுது, கர்ப்பிணி பெண்கள் அசெளகரியம்!
பளுதூக்கி பழுது, கர்ப்பிணி பெண்கள் அசெளகரியம்!
பளுதூக்கி பழுது, கர்ப்பிணி பெண்கள் அசெளகரியம்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow