கட்டணத்தை குறைக்க முடியாது-அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம்!

SaiSai
Nov 1, 2025 - 14:57
 0  22
கட்டணத்தை குறைக்க முடியாது-அகில இலங்கை முச்சக்கர வண்டிகள் சங்கம்!

எரிபொருள் விலைச் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், முறையான ஒழுங்குமுறை இல்லாத காரணத்தினால் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தத் திருத்தமும் மேற்கொள்ளப்படாது என அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர கருத்துத் தெரிவிக்கையில், லங்கா பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 5 ரூபாவால் குறைத்திருந்தாலும், அதன் பயன் நுகர்வோருக்குச் சென்றடையாது என்று குறிப்பிட்டார். 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் ஒக்டேன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டது. இதன்படி, 299 ரூபாவாக இருந்த ஒக்டேன் 92 பெற்றோலின் புதிய விலை 294 ரூபாவாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow