மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் விபத்து!

SaiSai
Oct 4, 2025 - 19:35
 0  30
மஸ்கெலியா ஹட்டன்  பிரதான வீதியில் விபத்து!

வீதியை விட்டு விலகி சென்ற கெப்ரக வாகனம்.

மஸ்கெலியா ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் இன்று மாலை மஸ்கெலியா காட்மோர் பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நோக்கி சென்ற போது கெப ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது..

கெப் ரக வாகனத்தில் மூன்று பெண்கள் மற்றும் சாரதி அடங்கலாக நால்வர் பயணம் செய்து உள்ளனர்.

தெய்வாதீனமாக கெப் ரக வாகனம் மண் திட்டில் சரிந்து நின்றதால் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை என்று ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

இப் பகுதியில் கன மழையுடன் பணி மூட்டம் காணப் படுவதால் இந்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி சென்று உள்ளது.

மஸ்கெலியா நிருபர்.

செ.தி.பெருமாள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow