பெரும் கல்வியாளர் பேராசிரியர் சமன் ராஜினாமா!! NPP அரசின் தலையீடு அதிகம் என்கிறார் :
பெரும் கல்வியாளர் பேராசிரியர் சமன் ராஜினாமா!! NPP அரசின் தலையீடு அதிகம் என்கிறார் :
தேசிய விஞ்ஞான அறக்கட்டளையின் தலைவராகவும் தேசிய நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய பேராசிரியர் சமன் சேனவீர தனது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது இராஜினாமா கடிதத்தை நேற்று முன்தினம் (15) விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சரிடம் சமர்ப்பித்ததாகவும் கூறப்படுகிறது.
அரசியல் அழுத்தங்களினால் தனது பணியைத் தொடர முடியாத காரணத்தினால் தலைவர் மற்றும் பணிப்பாளர் பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் பேராசிரியர் சமன் சேனவீர தெரிவித்துள்ளார்.
மூத்த விஞ்ஞானியான பேராசிரியர் சமன் சேனவீர, அவுஸ்திரேலியாவில் பணியாற்றியவர், புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தலைவராகவும் தேசிய நானோ தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.
What's Your Reaction?



