தீப்பற்றி எரிந்த பஸ்

நல்லூர் ஆலயத்திற்கு சுற்றுலா வந்தவர்களின் பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் , சிறிது நேரம் அவ்விடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தென்னிலங்கையில் இருந்து பஸ்ஸில் யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்கள் , நல்லூர் முத்திரை சந்தி பகுதியில், பஸ்ஸை நிறுத்தி விட்டு , நல்லூர் ஆலயத்திற்கு சென்றுள்ளனர். சாரதி பஸ்ஸில் இருந்த நிலையில் , திடீரென பஸ் தீப்பற்றியுள்ளது. விரைந்து செயற்பட்ட சாரதி தீயினை அணைக்க முற்பட்ட வேளை அது பயனளிக்காத நிலையில் ,அவ்விடத்தில் நின்றவர்கள் , யாழ் . மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் பேருந்தில் ஏற்பட்ட தீயினை அணைத்தனர். தீயணைப்பு படையினரின் விரைவான செயற்பாட்டினால் , பஸ்ஸினுள் தீ பெருமளவுக்கு பரவாமல் அணைக்கப்பட்டது.

SaiSai
Aug 17, 2025 - 21:42
 0  21
தீப்பற்றி எரிந்த பஸ்
தீப்பற்றி எரிந்த பஸ்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow