விகாரைக்கு அருகில் குளவிகள் கூடு மக்கள் பீதி
விகாரை பகுதியில் உள்ள புத்தர் சிலை அருகே குளவி கூடு மக்கள் பீதியில். சிவனடி பாத மலைக்கு செல்லும் பிரதான நுழைவாயில் பகுதியில் உள்ள பௌத்த விகாரை அருகே நிருவ பட்டு உள்ள புத்தர் சிலை பகுதியில் ஜந்துக்கு மேற்பட்ட குளவி கூடு உள்ளது. இப் பகுதியில் தற்போது கடும் வெப்பமான வானிலை உள்ளதாலும் கடும் காற்று வீசுவதால் இந்த குளவி கூடு களைந்து அவ் வீதியூடாக செல்லும் மக்களை தாக்க கூடும். நாளாந்தம் சிவனடி பாத மலைக்கு உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் அதிக அளவில் அவ் வீதியூடாக பயனிப்பதாளும் நல்லதண்ணி தோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் அவ்வீதியில் அதிக அளவில் போக்குவரத்து மேற் கொள்வதால் அந்த குளவி கூட்டால் பாரிய பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி இந்த குளவி கூடுகளை அப்புற படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும். மஸ்கெலியா நிருபர்.

கோப்புகள்
What's Your Reaction?






