இளைஞர் பேரவையில் வரலாற்றில் முதன் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவம்.பிரதமர்

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, ஓகஸ்ட் 19 அன்று பாராளுமன்ற வளாகத்தில் இளைஞர் பாராளுமன்ற அமைப்பு ஏற்பாடு செய்த விசேட சந்திப்பில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உரையாற்றினார். இதன்போது, வரலாற்றில் முதல்முறையாக தேசிய இளைஞர் பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் கணிசமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். புதிய உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், கடந்த காலங்களில் இளைஞர் பேரவையில் பெண் பிரதிநிதித்துவம் குறைவாக இருந்த நிலை மாறியுள்ளதாகவும், இந்த மாற்றம் அனைத்து துறைகளிலும் பிரதிபலிப்பதாகவும் கூறினார். மேலும், இளைஞர் வன்முறை மற்றும் அமைதியின்மை பற்றிய பழைய உரையாடல்களுக்கு மாறாக, நாட்டுக்கு இளைஞர்களைப் பற்றிய புதிய, நேர்மறையான உரையாடல் தேவை என்றும், இதற்கு இளைஞர்களுக்கு தனித்துவமான வாய்ப்பும் பொறுப்பும் உள்ளதாகவும் வலியுறுத்தினார். நிகழ்வில், இளைஞர் பேரவையின் 52 பிரதிநிதிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, பிரதி அமைச்சர்கள் வைத்தியர் மதுர சேனவிரத்ன, எரங்க குணசேகர, இளைஞர் பேரவை பணிப்பாளர் நாயகம் சுபுன் விஜேரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் பேரவை உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

SaiSai
Aug 20, 2025 - 04:44
Aug 20, 2025 - 04:45
 0  9
இளைஞர் பேரவையில் வரலாற்றில் முதன் முறையாக அதிகரிக்கப்பட்டுள்ள பெண்களின் பிரதிநிதித்துவம்.பிரதமர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow