அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த வேலையில் கைது.

SaiSai
Oct 31, 2025 - 10:50
 0  33
அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த வேலையில் கைது.

அரச பேருந்து சாரதி ஒருவர் போதைப் பொருள் வைத்திருந்த வேலையில் கைது.

இச் சம்பவம் நேற்று இரவு நல்லதண்ணி பகுதியில் உள்ள பேருந்து நிலைய தங்குமிட விடுதியில் வைத்து நல்லதண்ணி பொலிசாரால் கைது செய்யப்பட்டு உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் தனக்கு கிடைத்த இரகசிய தகவல்களை தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சந்தேக நபரை நோட்டம் இட்டு வந்த வேலையில் நேற்று 30 ம் திகதி இரவு போதை வில்லைகள் 2 ம் ஹேரோயின் 77 மில்லி கிரேம் வைத்திருந்த வேலையில் நல்லதண்ணி பொலிசார் கைது செய்து உள்ளனர்.

இவ்வாறு கைது செய்ய பட்டவர் ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் சாரதியாக கடமை புரியும் வட்டவளை பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

சந்தேக நபரை இன்று ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்த உள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow