இந்தியா மற்றும் சீனா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு!
ஐ.நா பொதுச் சபையின் 80-வது கூட்டத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் டொனல்டு ட்ரம்ப், உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு இந்தியா, சீனா நிதியுதவி அளிப்பதாக குற்றம்சாட்டினார்.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகிறேன். இந்தப் போரில் ரஷ்யாவுக்கு இந்தியாவும், சீனாவும் நிதி உதவி அளிக்கிறார்கள். ரஷ்யாவில் இருந்து அவர்கள் கச்சா எண்ணெய் வாங்குவதுதான் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பாவும் தலையிட வேண்டும். உலகின் உயிரி ஆயுதங்கள் உருவாக்குவதை நாம் தடுக்க வேண்டும். அதற்கான முயற்சியை சர்வதேச அளவில் நான் முன்னெடுப்பேன்.
உலக நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பு அமெரிக்கா கடையில் எடுத்துள்ள தடுப்பு முறை நடவடிக்கை. அமெரிக்காவுக்கு கடும் வரி விதிப்பவர்களுக்கு வரி விதித்துள்ளோம்” என்றார் ட்ரம்ப்.
What's Your Reaction?



