நவராத்திரியின் மூன்றாவது நாள் வழிபாடு.
நவராத்திரியின் மூன்றாம் என்பது துர்கை வழிபாட்டின் நிறைவான நாளாகும். வீரம், வெற்றியை பெறுவதற்கான நிறைவு நாள் என்பதால் இந்த நாளில் பராசக்தியின் சக்திவாய்ந்த வடிவத்தையும், வெற்றியை தரும் தேவியின் வடிவத்தையும் வழிபடுவது சிறப்பு. நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாடு என்பது வாழ்வில் இருக்கும் நெருக்கடியான நிலைகளை சரி செய்யும் வழிபாடாகும்.நவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப்பெரும் தேவியர்களையும் வழிபட்டு, அவர்களின் அருளை பெறுவதற்கான காலமாகும். நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் அம்பிகையை துர்கையாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் வழிபாடு செய்வது வழக்கம். நவராத்திரியின் முதல் நாளில் அம்பிகையை மகேஸ்வரியாகவும், இரண்டாவது நாளில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபட்டு மகிழ்ந்தோம். மூன்றாவது நாள் என்பது துர்கை வழிபாட்டின் நிறைவு நாளாகும். அதனால் இந்த நாளை காளி வழிபாடு என்றும் சொல்லுவது உண்டு.
What's Your Reaction?



