நீதிமன்றில் ஆஜரான ஜீவன் தொண்டமான்
கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் இன்று (04) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கில் 10 சந்தேக நபர்கள் தொடர்புடையவர்களாக அடையாளம்காணப்பட்டுள்ளனர். சீ.சி.டிவி காட்சிகளை பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், வழக்கை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் ஜீவன் தொண்டமான் சார்பாக வழக்கறிஞர் பெருமாள் ராஜதுரை முன்னிலையாகியிருந்தார். கெளனிவெளி பெருந்தோட்ட நிறுவனம் சார்பாக பாலித்த சுபசிங்க மற்றும் சுரேஷ் கயான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகிய இருந்தனர்

What's Your Reaction?






