பல கோடி பெறுமதியான வாகனங்கள் உக்கும் நிலையில்!
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வாகனங்கள் உக்கும் நிலையில். கடந்த பல வருடங்களாக மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் லக்சபான பகுதியில் சாலை ஓரத்தில் கடந்த பல ஆண்டுகளாக பல கோடி ரூபாய் பெறுமதியான கணரக வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டு உள்ளது. சுமார் ஜந்து ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் தரித்து நிற்பதால் அந்த வாகனங்கள் இரண்டை சுற்றி புற்கள் செடி கொடிகள் படர்ந்து உள்ளது. இந்த இரண்டு வாகனங்களும் பல கோடி ரூபாய் பெறுமதியான கணரக வாகனங்கள் ஆகும். மோகினி எல்லை பகுதியில் வீதி அபிவிருத்தி செய்து கொண்டு இருந்த வேளையில் அந்த கணரக வாகனங்கள் அப் பகுதியில் காபட் இடும் பணிக்காக கொண்டு வர பட்டது. இந்த கணரக வாகனங்கள் இரண்டையும் உரித்தான நிறுவனம் எடுத்து செல்ல வேண்டும்.
What's Your Reaction?






