மஸ்கெலியாவில் இடைவிடாது பெய்த மழை

கனத்த மழை பெய்தது வருகிறது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் முதல் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதனால் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந் தோட்ட தொழிலாளர்கள் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகின்றனர். கன மழை காரணமாக சாமி மலை ஓயா,காட்மோர் ஓயா,மறே ஓயா, சியத்தகங்குல ஓயா வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது. காட்மோர் நீர்வீழ்ச்சி,மறே நீர்வீழ்ச்சி ஆகிய இரண்டிலும் அதிக அளவில் நீர் வரத்து ஏற்பட்டு உள்ளது. மற்றும் இப் பகுதியில் உள்ள அனைத்து ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிகளவில் பணி மூட்டம் காணப் படுகின்றன ஹட்டன் மஸ்கெலியா வீதியில் நோட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் பணி மூட்டம் காணப் படுவதால் வாகன சாரதிகள் வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துமாறு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார வேண்டுகோள் விடுத்துள்ளார். நீர் மின் நிலைய பகுதியில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. செ.தி.பெருமாள் மஸ்கெலியா நிருபர்.

SaiSai
Sep 9, 2025 - 17:17
 0  14
மஸ்கெலியாவில் இடைவிடாது பெய்த மழை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow