நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை,சஜீத் பிரேமதாச!

SaiSai
Oct 25, 2025 - 05:39
Oct 25, 2025 - 05:39
 0  21
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை,சஜீத் பிரேமதாச!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், இது ஒரு தீவிர பிரச்சினையாகக் கருதப்படுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டிய அவர், வெலிகம பிரதேச சபை தவிசாளர் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவருக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்படாததால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதே போன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது நகைச்சுவையல்ல. ஒருவர் கொல்லப்பட்டால் என்ன செய்ய முடியும்? வெலிகம சம்பவத்தில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow