தனியார் வங்கியில் வேலை பெற்று தருவதாக பண மோசடி-மஸ்கெலியாவில் சம்பவம்
பிரபல அரச வங்கி ஒன்றில் நாளாந்தம் 1000/= வேதணத்திற்கு பணிபுரிந்த யுவதி ஒருவரிடம் தனியார் வங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடி.
இச் சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் புரவுன்லோ தோட்டத்தில் உள்ள யுவதி ஒருவருக்கு நேற்று முன்தினம் இடம் பெற்று உள்ளது.
இச் சம்பவம் குறித்து நேற்று 13/11/2025 அன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார் பாதிக்கப்பட்ட யுவதி.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் தான் பணிபுரிந்த அரச வங்கியில் உள்ள நிலையான தொலைபேசிக்கு வந்த தொலைபேசி அழைப்பை தொடர்ந்து ரூபாய் 50,000/= பணத்தை ஈசி கேஸ் (Easy cash) மூலம் வைப்பிட்ட பின்னர் தன்னை ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு வருமாறும் அங்கு லெப் டொப் Laptop ஒன்று வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து உள்ளார்.
சம்பந்தப்பட்ட யுவதி ஹட்டன் சிங்கர் நிறுவனத்திற்க்கு சென்று பார்த்த போது அவ்வாறு யாரும் இல்லாத காரணத்தால் திரும்பி வந்து சம்பந்தப்பட்ட நபரிடம் கதைத்த போது தான் தான் ஏமாற்ற பட்டு உள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து அவர் 13/11/2025 அன்று மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்து உள்ளார்.
புகார் பதிவு செய்யப்பட்ட வேலையிலும் சம்பந்தப்பட்ட ஏமாற்று காரரின் கையடக்க தொலைபேசி இயங்கி வந்தமை குறிப்பிட தக்கது.
மஸ்கெலியா நிருபர்.
What's Your Reaction?



