அமெரிக்கவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்து.
பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நீண்டகாலப் பாதுகாப்புப் பங்காளித்துவத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்காவின் தொடர்ச்சியான நட்பு, ஒத்துழைப்பு மற்றும் தாராள மனப்பான்மை என்பவற்றுக்கு இலங்கை ஆழமாக நன்றி தெரிவிப்பதாகவும், இந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இலங்கை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
What's Your Reaction?



