குளவிக் கொட்டுக்கு உள்ளான நால்வர் வைத்தியசாலையில் அனுமதி
குளவி கொட்டுக்கு இலக்கான நால்வர் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில். இச் சம்பவம் இன்று 26 ம் திகதி மதியம் 1.30 இடம் பெற்றது. ஆர்.பி.கே.பிலான்டேசனுக்கு உரித்தான மஸ்கெலியா லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கலைந்து தேயிலை கொழுந்து பரித்து கொண்டு இருந்த பெண்கள் மீது தாக்கியுள்ளது. நான்கு பெண்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலைக்கு கொண்டு வந்ததி மூன்று பெண்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வெளியேறி உள்ளனர்.ஒரு பெண் தொழிலாளி வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து நல்லதண்ணி பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மஸ்கெலியா நிருபர்.

What's Your Reaction?






